இடப்பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவருக்கு இடையே உள்ள பொதுப்பாதை பிரச்னையில் ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதை அறிந்த நபர் புதன்கிழமை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
தற்போதைய செய்திகள்இடப்பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவருக்கு இடையே உள்ள பொதுப்பாதை பிரச்னையில் ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதை அறிந்த நபர் புதன்கிழமை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவருக்கு இடையே உள்ள பொதுப்பாதை பிரச்னையில் ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதை அறிந்த நபர் புதன்கிழமை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். இவருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வரச் செய்து, மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தசரதபெருமாள் (46). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த குருநாதன் (65) என்பவருக்கும் பொது இடப் பிரச்னை இருந்து வந்தது. இது குறித்த புகார்களின் பேரில், வருவாய்த்துறையினர் இப் பாதையில் ஆக்கிரமிப்பு எடுக்க காவல் துறையினர் பாதுகாப்பை கோரி கடிதம் எழுதியிருந்துள்ளார்கள். புதன்கிழமை ஆக்கிரமிப்பு எடுக்கப்பட இருப்பதாக தசரதபெருமாளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் மல்லி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவம் பற்றி அறிந்ததும், காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபுரத்தின் கீழே இருந்த அவரது மனைவி மற்றும் மாமனாரிடம் பேச்சு வார்தை நடத்தினார். முறையாக சம்மன் அனுப்பி சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் டி.எஸ்.பி. உறுதியளித்தார். இதனையடுத்து இத் தகவல் செல்போன் கோபுரத்தில் இருந்த தசரதபெருமாளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 30 நிமிட போராட்டத்தை விலக்கிக் கொண்ட அவர், இறங்கி வந்தார். பின்னர் அவரை போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறியதையடுத்து அவரை குடும்பத்தாருடன் வீட்டிற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.