முகப்பு
தற்போதைய செய்திகள்

உரங்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

உரங்களை பதுக்குவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

உரங்களை பதுக்குவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 51,996 ஹெக்டேர் பரப்பிற்கு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உத்தேசமாக 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

ராபி பருவத்தில் பயிர் சாகுபடிக்குத் தேவையான யூரியா 1400 மெட்ரிக் டன், டிஏபி 800 மெட்ரிக் டன், பொட்டாஷ் 400 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 550 மெட்ரிக் டன் என்ற நிலையில் தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு உள்ளது.

பருவமழை தொடங்கி விட்டதால் யூரியா தேவை அதிகமாகும் என்ற நிலையில் தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா உரத்தைப் பதுக்கி இருந்தாலோ, அல்லது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்தாலோ, உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் டிஏபி, பொட்டாஷ், காம்பளக்ஸ் போன்ற உரங்களை மூட்டையில் குறிப்பிட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →