முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சாபுரத்தில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்துப் போட்டி: செப்.30 வரை பதிவு செய்யலாம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் நகர கைப்பந்துக்கழகம் 15-ம் ஆண்டாக நடத்தும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளலாம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் நகர கைப்பந்துக்கழகம் 15-ம் ஆண்டாக நடத்தும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்துப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளலாம்

இது குறித்து கழகத்தின் நிர்வாகிகள் எஸ்.ராமசாமி, ஜி.டி.செல்வகணேஷ் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போட்டிகள் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அக்டோபர் 3 மற்றும் 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும்.

போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அணிகள் தங்கள் பெயரினை பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 3-ம் தேதி மாலை 3 மணியளவில் விளையாட்டு அரங்கத்திற்குள் அணிகள் வந்து சேர வேண்டும். நுழைவுக் கட்டணம் கிடையாது.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் நிரந்தரக் கோப்பை. 2-ம் பரிசு ரூ.8 ஆயிரத்துடன் நிரந்தரக் கோப்பை. 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் நிரந்தரக் கோப்பை. 4-ம் பரிசு ரூ.4 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் நிரந்தரக் கோப்பை. பதிவு செய்ய வேண்டிய செல்போன் எண்கள்: 99760-21368 அல்லது 86080-02982.
முகவரி: 41,மாரியம்மன்கோவில் வடக்கு ரதவீதி, மம்சாபுரம் 626110. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.

முழு கட்டுரையைப் படிக்க →