தற்போதைய செய்திகள்

முத்துப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் கார் மீது மோதியதில் இருவர் பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுததி இருந்த கார் மீது இருசக்கரவாகனம் மோதியதில் காரி்ன் கதவு அருகே அமர்ந்திருந்த மாணவன், மற்றும் இருசக்கரவாகனத்தி்ல் வந்த இளைஞற் உள்பட இருவர் பலியாயினர்.

ரவி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுததி இருந்த கார் மீது இருசக்கரவாகனம் மோதியதில் காரி்ன் கதவு அருகே அமர்ந்திருந்த மாணவன், மற்றும் இருசக்கரவாகனத்தி்ல் வந்த இளைஞற் உள்பட இருவர் பலியாயினர்.

 தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பலில் பணியாற்றி வருபவர் ஸ்டீபன் )44). இவரது மகன்  தனியார் மெட்ரிக் பள்ளியில் 9வது படித்து வரும் பெரிஸ்(14) பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை சாமிி தரிசனம் செ்வதற்காக வேளாங்கண்ணி சர்ச்சுக்கு குடும்பத்துடன் காரி்ல வந்திருந்தனர்.

கார் தூத்துக்குடியைச் சேர்நத மோகன்தாஸ் மகன் விஜயகுமார(32) ஓட்டி வந்தார்.  சாமி கும்பிட்டு விட்டு சனிக்கிழமை இரவு கிழக்குகடற்கரை சாலை வழியாக தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது முத்துப்பேட்டை புரவழிச்சாலை அருகே இளைப்பாறுவதற்காக காரை சாலையோரம் நிறுத்தி இருநதனர்.  காரின் கதவு அருகே பெரீஸ் அமர்ந்திருந்தார். அப்போது ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன மகன் கோபி (22) என்பவர் இருசக்கரவாகனத்தில் கார் நின்ருகொண்டிருந்த பகுியில் முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டிரந்தார்.

 இருசக்கரவாகனம் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் காரில் அமர்நதிருந்த பெரீஸுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது.  பெரீஸ் தஞ்சையில் மீனாட்சி  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 இரசக்கரவாகனத்தில் வந்த கோபி திருவாரூர் மருத்துவக்கலிலூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்ட வழியில் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து இருசடலங்களையும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் உறவினர்ளிடம் ஒப்படைத்தனர்.

 பிறந்தநாள் கொண்டாடிய பெரீஸ் பெற்றோர்கள் கண் முன்பாகவே விபத்துக்குள்ளாகி இறந்தது அவர்கள் உறவினர்களிடைய் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT