தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் சிபிஎம் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமணி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் சிபிஎம் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் பழைய நன்னாவரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை விவசாயிகளின் கரும்பு, மணிலா உள்ளிட்ட விவசாயப் பயிர்களை ஜெ.சி.பி இயந்திரம் கொண்டு அழித்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை வன்மையாக கண்டித்தல், பழைய நன்னாவரம், களமருதூர், பெரியார் நகர், உ.செல்லூர் ஆகிய கிராமங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை அகற்றிய அதிகாரிகளை வன்மையாக கண்டித்தல், களமருதூரில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமித்து தனியார் பள்ளி கட்டிடம் கட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் நபருக்கு துணை போகும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வன்மையாக கண்டித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமை வகித்தார்.ஒன்றிய நிர்வாகிகள் கே.ஆறுமுகம், கே.அய்யனார், எஸ்.வேல்முருகன், பி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு டி.எம்.ஜெயசங்கர், எம்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை ஆர்.சீனுவாசன், திருவெண்ணெய்நல்லூர் ஷேக்சலாவுதீன், மாவட்டக்குழு இ.அலமேலு, ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT