முகப்பு
தற்போதைய செய்திகள்

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி பத்திரமாக மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஆகஸ்ட், 2016 at 12:21 PM
பகிர்:

புது தில்லி: பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி 5 வயது சிறுமி சாரா கடத்தப்பட்டாள். சாராவின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் முகநூல் வழியாகவும் சிறுமி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.

தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று சிறுமியை கடத்திச்சென்ற காரை கண்டுபிடித்து, சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர்.

Advertisement

பஹ்ரைனில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவிய பஹ்ரைன் அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.