ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கோயில் நிர்வாகம்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மாதத்திற்கு ஒருமுறை கோயில் பரிவார தேவதைகளின் உண்டியல் காணிக்கை கணக்கிடப்படுவது வழக்கம்.
ஆனால் ரூ500, ரூ1000 நோட்டுகள் ரத்து செய்யபட்டதிலிருந்து விரைவாக உண்டியல் நிறைந்து வருகிறது. அதனால் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை மூலம், ரூ1.19 கோடி, ஆர்ஜித சேவா டிக்கெட் மற்றும் பிரசாத விற்பனை மூலம், ரூ3.37 கோடி கோவிலுக்கு வருமானம் கிடைத்தது.
இது கடந்த அக்டோபர் மாதம் கிடைத்த வருவாயை காட்டிலும் மூன்று மடங்கு உயர்வு என கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.