வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதையடுத்து காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குடியாத்தத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரத்குமார்(25) இரு பெண்களை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்து வந்தார். சிகிச்சைக்குப் பிறகு மூவரும் காரில் ஊருக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளிவந்த நிலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து காரில் இருந்த மூவரும் இறங்கினர். மளமளவென தீப்பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேலூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸôர் விசாரணை நடத்தியதில் காரில் உள்ள பெட்ரோல் டியூப் அறுந்ததால் தீப்பற்றியது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.