ஸ்ரீவில்லிபுத்தூரில் 123 பள்ளிகளைச் சேர்ந்த 9800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிகளுக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா புதன்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் 123 பள்ளிகளைச் சேர்ந்த 9800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிகளுக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா புதன்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிகளுக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா புதன்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.அரசின் விலையில்லா புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை மாணவ மாணவியருக்கு வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பிள்ளைகளின் படிப்பு பெற்றோருக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் இதுபோன்ற விலையில்லா கல்வி உபகரங்ணங்கள் வழங்கும் சீரிய திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக முதல்வர் ஏழை, எளிய கிராமப்புற மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நீங்கள் படித்தால் போதும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். உங்களுக்கு முதல்வர் கூடிய விரைவில் காலை சிற்றுண்டி வழங்க உத்தரவிடவுள்ளார். படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் நீங்கள் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
விழாவில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நிலவங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, ஒன்றியக் குழு உறுப்பினர் சிந்து முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரபாவிற்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியை பா.பாத்திமா ஞானம் நன்றி கூறினார்.