முகப்பு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி கடத்தல் வழக்கு: அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி

அருப்புக்கோட்டையில் துப்பாக்கி கடத்தல் வழக்கில், அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

அருப்புக்கோட்டையில் துப்பாக்கி கடத்தல் வழக்கில், அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

25.3.2010-ம் தேதி அட்டாக் பாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது அருப்புக்கோட்டை நகர் போலீஸார் துப்பாக்கி கடத்தல் வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வந்தனர். 2011-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வராத அட்டாக் பாண்டி மீது அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் 2013-ம் ஆண்டு அட்டாக் பாண்டி மீது பொட்டு சுரேஷ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸார் அட்டாக் பாண்டியை தேடி வந்த நிலையில் மும்பையில் தலைமறைவாக இருந்த அவரை 21.9.2015-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனக்கு துப்பாக்கி கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் அ.மங்களசாமி ஆஜராகி வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதி ரா.தாரணி, அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →