முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் சா.ராமராஜா வரவேற்றார்.

மிகவும் புகழ்பெற்ற இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்களும் வருகை புரிவார்கள். தமிழகத்தின் சிறப்பையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு வருகை புரியும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். தங்கள் தங்கள் துறைகளின் கீழ் செய்யப்பட வேண்டிய பணிகள் தற்போது விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் இப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். தேரோடும் நான்கு வீதிகளிலும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எந்தப் பணிக்கும் சாலையை தோண்டக் கூடாது. இப் பகுதிகளில் தேங்கும் குப்பைகள் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும். காவல்துறையினர் தனியே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இரண்டு அல்லது மூன்று ஆய்வுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்தப்படும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →