தற்போதைய செய்திகள்

கெளரவக் கொலை: அரசியலுக்கு அப்பாற்பட்டு கையாள வேண்டும்

கெளரவக் கொலைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு கையாள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன்

கெளரவக் கொலைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு கையாள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாதி ரீதியாக 81 கொலைகள் நடைபெற்றுள்ளன. இது போன்ற சாதியக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியும் நிறைவேற்றவில்லை.

இச் சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காதல் திருமணம் செய்த உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் அண்மையில் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவி்த்துள்ளது.

மேலும் ஒரு சில கட்சிகள் வாக்கு வங்கிக்காக கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. இது போன்ற கெளரவக் கொலைகளை அரசியல் அப்பாற்பட்டும், கட்சிக்கு அப்பாற்பட்டும், தேர்தலுக்கு அப்பாற்பட்டும் பார்க்க வேண்டும். சாதிகளை கடந்து காதல் திருமணம் செய்வது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாகும். இதைத் தடுக்கவும், எதிர்க்கவும் யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே எதிர்கால சந்ததியினருக்கு நாம் சிறந்த சமூகத்தை வழங்க வேண்டியது கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT