முகப்பு
தற்போதைய செய்திகள்

 சிதம்பரம் மருந்துக்கடையில் ரூ.1லட்சம் ரொக்கம், 6 செல்போன்கள் திருட்டு

சிதம்பரம் உள்ள மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடையில் ரூ.1லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சிதம்பரம் உள்ள மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடையில் ரூ.1லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் நெடுஞ்சாலையில் ஓமக்குளத்தில் தாமோதரன் (32) என்பவர் மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டுக்கொண்டு வீ்ட்டிற்கு சென்று, வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.