முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய குருத்தோலை பவனி

.ஸ்ரீவில்லிபுத்தூரில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது.உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள்,

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய குருத்தோலை பவனி

.ஸ்ரீவில்லிபுத்தூரில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது.உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள்,

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

.ஸ்ரீவில்லிபுத்தூரில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. திருச்சபைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது.உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பாடு மரணத்திற்கு முந்தைய 40 நாட்களை லெந்து காலமாக அனுசரிப்பார்கள்.

 இந்நாட்களில் உபவாசம் இருந்து தினமும் சிறப்பு வழிபாடுகளை தேவாலயங்களில் நடத்துவார்கள். இதன் நிறைவு மற்றும் பரிசுத்த வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் சபைகுரு ஜே.ஜாண் கமலேசன், ஆர்.சி. தேவாலாயத்தின் பங்குதந்தை அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் ஐக்கிய குருத்தோலை பவனி தொடங்கியது. ஏராளமான திருச்சபை மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு ஒசன்னா, ஒசன்னா என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாக வந்தனர்.

பின்னர் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சிறப்பு திருவிருந்து ஆராதனையை சபைகுரு ஜாண் கமலேசன் நடத்தி அருளுரையாற்றினார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.21-ம் தேதி முதல் பரிசுத்த வாரம் அனுசரிக்கப்படும்.

 24-ம் தேதி புனித வியாழன், 25-ம் தேதி புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. 27-ம் தேதி அதிகாலை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →