முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் வாக்குச்சாவடியாக மாறிய வசந்தராஜ் திரையரங்கம்

முதல்வர் ரங்கசாமி இந்திரா நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி இந்திரா நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தனது வீட்டில் இருந்து மோட்டார் பைக் மூலம் வந்த முதல்வர் 100 மீட்டர் முன்பே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது,

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. எங்கள் அரசு செய்த சாதனைகளை மீண்டும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு தேடி தரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

வாக்குச்சாவடியாக மாறிய திரையரங்கம்

மூலகுளம் பகுதியில் வசந்தராஜ் திரையரங்கம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டது. திரையரங்கு காட்சிகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டு மக்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.