முதல் தலைமுறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பர்: தலைமை தேர்தல் அதிகாரி
புதுச்சேரியில் முதல்தலைமுறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிப்பர் என தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்தலைமுறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிப்பர் என தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பெருமாள் கோயில் தெரு வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் டாக்டர் கந்தவேலு கூறியதாவது:
வாக்குப்பதிவு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. முதல்தலைமுறை, இளம்வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உற்சாகமாக வந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் கந்தவேலு.