முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்குப் பதிவு அலுவலரின் சட்டையைக் கழற்ற வைத்த காங்கிரஸ் பிரமுகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி வாக்குப் பதிவின் போது, வாக்குப் பதிவு அறையில் பணியிலிருந்த ஆசிரியரின் சட்டையின் நிறம் அதிமுகவின்...

தற்போதைய செய்திகள்

வாக்குப் பதிவு அலுவலரின் சட்டையைக் கழற்ற வைத்த காங்கிரஸ் பிரமுகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி வாக்குப் பதிவின் போது, வாக்குப் பதிவு அறையில் பணியிலிருந்த ஆசிரியரின் சட்டையின் நிறம் அதிமுகவின்...

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி வாக்குப் பதிவின் போது, வாக்குப் பதிவு அறையில் பணியிலிருந்த ஆசிரியரின் சட்டையின் நிறம் அதிமுகவின் வர்ணம் போல இருப்பதாய் கூறி ஏற்பட்ட பிரச்னையில், குறிப்பிட்ட ஆசிரியர் பிரச்னைக்குரிய சட்டையைக் கழற்றிவிட்டு மாற்றுச் சட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி எண்கள் 136 மற்றும் 203 அமைக்கப்பட்டிருந்தது.இதில் விருதுநகரைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.கார்த்திகேயன் (42) வாக்குப் பதிவு அலுவலர் (1) ஆக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சில வண்ணங்கள் நிறைந்த கோடுபோட்ட சட்டை அணிந்து பணியில் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த திமுக ஆதரவு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடற்கரை என்பவர், கார்த்திகேயனின் சட்டை ஆளும் அதிமுக கட்சிக் கொடியின் நிறத்தில் இருப்பதாக பிரச்னையை எழுப்பினார்.

இவருக்கு ஆதரவாக சில முகவர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். இருந்தபோதிலும் வாக்குப் பதிவு தொய்வின்றி அமைதலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.இந்நிலையில் கடற்கரை வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று, நகர் காவல் சார்பு ஆய்வாளர் வீரணனிடம் இது குறித்து கூறினார். அவர் போய் ஆசிரியரின் சட்டையைப் பார்த்துவிட்டு வந்து, பல வர்ணத்தில் அவர் சட்டை போட்டுள்ளார். இதனால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றார். தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டே இருந்ததால் மீண்டும் சார்பு ஆய்வாளர் வாக்குச் சாவடிக்குள் சென்றார்.

ஆனால் அதற்குள் ஆசிரியர் கார்த்திகேயன், அணிந்திருந்த சட்டைக் கழற்றிவிட்டு, தான் சனிக்கிழமை போட்ட பழைய சட்டையை போட்டுக் கொண்டு தனது பணியை செய்து கொண்டிருந்தார். ஆசிரியரின் பெருந்தன்மையைப் பாராட்டிய வாக்களிக்க வந்த பொதுமக்கள், கட்சியினரின் செயல்பாட்டைக் கண்டித்தனர். இதனால் வாக்குச் சாவடியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →