முகப்பு
தற்போதைய செய்திகள்

புஞ்சைப்புகழூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் எடுப்பதை தடுக்க நடவடிக்கை: வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி

வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக்கொண்டு தனி புதிய தனி தாலுகா உருவாக்கப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி.

Updated On : 7 நவம்பர், 2016 at 5:18 PM
பகிர்:

கரூர், 

வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக்கொண்டு தனி புதிய தனி தாலுகா உருவாக்கப்படும் என்றார் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைப்புகழூர், நாணப்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவித்த 100 யூனிட் மின்சாரம் இலவசம்,கூட்டுறவுக்கடன் தள்ளுபடி என அனைத்து திட்டங்களையும் 100சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக்கொண்டு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என்றார்.

பிரசார கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், கரூர் மாவட்டத்திற்கு 1000 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை முதல்வரிடம் கேட்டு கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கொண்டு வந்தவர் வேட்பாளர் செந்தில்பாலாஜி. குறிப்பாக உள் மாவட்டத்திலேயே மக்கள் தரமான மருத்துவ வசதி பெற மருத்துவக்கல்லூரி, பேருந்துநிலையம், 48 கோடியில் காவிரிக்குடிநீர் திட்டப்பணிகள் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர தனக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டு வந்துள்ளார். அவர் எந்த ஒரு வாக்குறுதி கொடுத்தாலும் முதல்வரிடம் எடுத்துரைத்து அதை நிறைவேற்றிக்கொடுப்பார்.

  ஏழைக்குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் சீருடை முதல் காலணி, கணினி வரை வழங்கி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கொடுத்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். 5,000 கோடி கூட்டுறவுக்கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. மின்சார கட்டணமே இல்லாமல் உருவாக்கிய ஆட்சி அதிமுக ஆட்சி என்றார்.

பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எம்ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, நாமக்கல் எம்பி. சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.