தற்போதைய செய்திகள்

அரிதான மரபணு நோய்கள் சிகிச்சைக்கா அரசு நிதி ஒதுக்க வேண்டும்: நடிகர் கார்த்தி

அரிதான மரபணு நோய்களின் சிகிச்சைக்காக அரசு நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும் என்று அரிதான மரபணு நோய்கள் விழிப்புணர்வுக்கான விளம்பரத் தூதுவரான நடிகர் கார்த்தி கூறினார்.

கவிதைமணி

சென்னை

அரிதான மரபணு நோய்களின் சிகிச்சைக்காக அரசு நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும் என்று அரிதான மரபணு நோய்கள் விழிப்புணர்வுக்கான விளம்பரத் தூதுவரான நடிகர் கார்த்தி கூறினார்.

அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கத்தின் (எல்.எஸ்.டி.எஸ்.எஸ்.)சார்பில் இந்திய அரிதான மரபணு நோய்கள் தினம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மரபணு மருத்துவ நிபுணர் டாக்டர் சுஜாதா ஜெகதீஷ் பேசியது: மரபணு தொடர்பான நோய்கள் சுமார் 40 வகைகள் உள்ளன. அவற்றில் 5 நோய்களுக்கு மட்டுமே இந்தியாவில் சிகிச்சை கிடைக்கிறது.

தமிழகத்தில் அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கத்தில் 450 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். சிகிச்சை இல்லாமல் அவற்றில் 20 குழந்தைகள் இறந்துவிட்டனர். மீதம் உள்ள குழந்தைகளில் 30 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு குழந்தைகள் மருத்துவமனைகளில் மரபணு குறைபாடுள்ள குழந்தைகளைப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

 கரு பாதுகாப்பு ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுரேஷ் பேசியது: மரபணு குறைபாடுகளுக்கு நிரந்த குணமடைதல் என்பது இல்லை. ஆனால் 3 மாத கர்ப்பத்திலேயே மரபணு குறைபாடுகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் உள்ளன.

அவ்வாறு கண்டறிவதன் மூலம் குறைபாடோடு குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஒரு குழந்தைக்கு மரபணு குறைபாடு இருந்தால், அடுத்த குழந்தைக்கும் இதே குறைபாடு ஏற்படுவதற்கு 25 சதவீதம் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

நடிகர் கார்த்தி கூறியது: மரபணு குறைபாடுகளால் பிறக்கும் குழந்தைக்கு ஆயுள் முழுவதும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு மரபணு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிதி மூலதனத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT