தற்போதைய செய்திகள்

தேசிய போலீஸ் நினைவு தினம்: ராஜ்நாத் சிங் மரியாதை

DIN

புதுதில்லி, 

தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி பணியின்போது உயிர்நீத்த போலீஸôருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி போலீஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நாளையொட்டி, தில்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள தேசிய போலீஸ் நினைவிடத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை வந்தார். பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், ஐ.பி. உளவுத்துறை தலைவர் தினேஷ்வர் ஷர்மா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும், துணை ராணுவப் படை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

"பணியின்போது உயிர்த்தியாகம் செய்த அனைத்து வீரமான போலீஸôரையும் நான் வணங்குகிறேன்' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஐ.பி. உளவுத்துறை தலைவர் தினேஷ்வர் ஷர்மா கூறுகையில், "நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 473 பேர் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT