தற்போதைய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சிவபால் யாதவ் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கம்

DIN

லக்னோ 
உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோ நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்ததும் வெளியேவந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராம் கரன் ஆர்யா, செய்தியாளர்களிடம் பேசும் போது  அமைச்சரவையில் இருந்து அகிலேஷ் யாதவின் மாமா சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்படட சிவபால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தலைவர் முலாயமை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதனால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT