தற்போதைய செய்திகள்

பொது சிவில் சட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது: வைகோ 

DIN

சென்னை, :

பொது சிவில் சட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

 பொது சிவில் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்ட கட்சியினரும், இஸ்லாமிய இயக்கத்தினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் மதிமுக  வைகோவை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

 இதன் பின்னர், வைகோ கூறியது:

பொதுச் சிவில் சட்டம் என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் ஜனநாயகம். இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT