தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா வெளிநாடு செல்வதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது: மருத்துவர்கள் விளக்கம்

தினமணி

சென்னை: சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்வதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது. வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டியம் அவசியம் அவருக்கில்லை என்று அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் குழு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து இதற்கு விளக்கம் அளித்தனர்.

 முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
 மருத்துவ நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ நிபுணர்கள் குழுவினர் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரைச் சந்திக்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்வதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் முற்றிலும் தவறானது. வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டியம் அவசியம் அவருக்கில்லை. முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
எனினும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT