தற்போதைய செய்திகள்

ஆயுதப் படையினருடன் தோளோடு தோள் நின்று தாய்நாட்டை காப்போம்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

DIN

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றது. நியூயார்க்கில் இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு ஆகியவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

விவாதத்துக்கு முன்னதாக வெளியுறவு செயலாளர் இதுபற்றி விளக்குவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று கூறும் போது இஸ்லாமாபாத்திற்குள் யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

இந்தியாவுடனான உறவு மோசமாகி வருகிறது. ஆயுதப் படையினருடன் தோளோடு தோள் நின்று தாய்நாட்டை காப்போம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT