முகப்பு
தற்போதைய செய்திகள்

13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

மதுரை, தேனி உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

மதுரை, தேனி உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலை நகரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை 20நாட்களுக்குள் அகற்றிட உத்தரவிட்ட நீதிபதிகள் இதுதொடர்பான அறிக்கையை ஜனவரி 11ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments