முகப்பு
தற்போதைய செய்திகள்

பி.வி.சிந்துவுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

இந்திய ஒபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

இந்திய ஒபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

இது பி.வி.சிந்துவின் கடின பயிற்சிக்கும், தொடர் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.  அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள். 

 மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை பி.வி.சிந்து படைத்து, நம் நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →