தற்போதைய செய்திகள்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆர்.​ ​ தங்கராஜு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள பிரமராம் பிகா சமேத சேஷபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருஞானசம்பந்தரால் திருப்பதிகம் பெற்று, திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றும் ராஜராஜசோழன், ராஜேந்திரன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னன் சுபேதார் ரகுநாத பண்டிதராஜன் ஆகியோரால் திருப்பணிகள் செய்த வரலாற்று சிறப்பு மிக்க ராகு - கேது தலமாக திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷே கப் பணிகள் ஏப்.5-ம் தேதி இரவு 8.45 மணிக்கு அனுக்ஞை, தனபூஜை, மகாசங்கல்பம், ஆச்சார்யவர்ணத்துடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. ஏப்.6-ல் வாஸ்து சாந்தி, சாந்தி ஹோமம் நடைபெற்றது.

ஏப்.7-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. இரவு 8.30மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, ஏப்.8-ம் தேதி காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, முற்பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஏப். 9-ம் தேதி மாலை 6 மணிக்கு 5-ம் கால யாக சாலை பூஜை, இரவு 8.30 மணிக்கு பிரதான மூல மூர்த்திகள் ரஜதபந்தன, அஷ்டபந்த மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏப்.10-ம் தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால யாக சாலை பூஜை, காலை 7 மணிக்கு சிற்றம் பல விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா பூர் ணாஹூதி, யத்ராதானம், கடங்கள் புறப்பட்டது. காலை 10 மணிக்கு விமான கோபுரங்கள், ராஜ கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் புனித நீர். காலை 10.30 மணிக்கு மூல மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திராள பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. ஏப்.10-ம் தேதி முதல் 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழாவில், தருமையாதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதினம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமட அதிபர் ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதின கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் செயல் அலுவலர் கி. பாரதிராஜா மற்றும் கோயில் நிர்வாகிகள் வள்ளிக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT