தற்போதைய செய்திகள்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: ஞாயிற்றுக்கிழமை 30,000 பேர் வருகை

தினமணி

உதகையில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள சூழலில், வார இறுதி நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உதகையில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள சூழலில் வார நாள்களைவிட வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு நடப்பு வாரத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை சுமார் 12,000 பேரும், சனிக்கிழமை 20,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை 26,000 பேரும் வந்தனர்.

தாவரவியல் பூங்கா தவிர, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், கொடநாடு காட்சிமுனை என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் நீலகிரியின் தயாரிப்புகள், உல்லன் ஆடைகள், கலைப் பொருள்கள் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT