முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் கூடுதலாக 250 புதிய சிறப்பு மருத்துவர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

விராலிமலை, அரசு மருத்துவமனைகளில் புதிதாக 250 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

விராலிமலை: விராலிமலை, அரசு மருத்துவமனைகளில் புதிதாக 250 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு விழக்களில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இம்மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இதுவரை 17,914 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர். மேலும் 1223 மருத்துவர்களுக்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது கூடுதலாக 250 பேர் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர்.

புதிதாக 20 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது, வரும் கல்வியாண்டு முதல் தமிழக மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 300 இடங்களை ஓதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஓப்புதல் அளித்துள்ளது என்றார் அமைச்சர் பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.