தற்போதைய செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்

DIN

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. பாட்னாவில் நிதிஷ்குமார் வீட்டில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும் போது கட்சியில் பிளவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் கட்சி இணைந்ததை கண்டித்து சரத்யாதவின் ஆதரவாளர்கள் நிதிஷ்குமார் வீட்டு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பாட்னாவில் நடந்த மக்களை சந்திக்கும் பொதுச்கூட்டத்தில் பேசிய சரத்யாதவ் நிதிஷ்குமாரின் முடிவை வன்மையாக கண்டித்தார். பாரதிய ஜனதாவுடன் கைகோர்க்கும் நிதிஷ்குமாருக்கு சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள் என்று  அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நிதீஷ் குமார் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா விடுத்த அழைப்பை ஏற்று கூட்டணியில் இணைவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. விரைவில் அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT