தற்போதைய செய்திகள்

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை: முதல்வர் பழனிசாமி

DIN

திருவாரூர்: திருவாரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி  விவசாயிகளை கடவுளின் குழந்தையாக மதித்தவர் எம்ஜிஆர் விவசாயிகளின் அருமையை திரைப்படங்கள், பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

தவறை தட்டிக்கேட்கும் குணம் தான் எம்ஜிஆரை முதலமைச்சராக ஆக்கியது என்று கூறினார். மேலும் அவர் பேசும் போது  தனி ஒருவராக இருந்து ஜெயித்துக் காட்டியவர் ஜெயலலிதா. எத்தனை இன்னல்கள், துயரங்கள் வந்தாலும் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர் ஜெயலலிதா. ஜெயலலிதா திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறுதிட்டங்களை கொண்டு வந்தார்.ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்றும் கூறினர்.

மேலும்  திராவிடத்தால் உரமேற்றப்பட்ட மண் திருவாரூர். தமிழகத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமாக திருவாரூர் விளங்குகிறது. பசுவுக்கு நீதி வழங்க மகனை தேர் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் ஆண்ட மண் திருவாரூர். என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான் இந்த ஆண்டு 11 கலை அறிவியல் அரசு கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக விலையில்லா சைக்கிள் திட்டம் போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.3% ஆக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இந்த ஆட்சி மீது வேண்டும் என்றே சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. 140 ஆண்டுகள் இல்லாத அளவில் வறட்சி நிலவிய போதும் தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை கண்டு அஞ்சப்போவதில்லை. விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிக்கடி தில்லி சென்று பிரதமரை சந்தித்ததால் தான் தமிழகத்திற்கு அதிகளவு வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் உறுதியளித்திருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.

குடவாசல் கலை அறிவியல் கல்லூரிக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும். வலங்கைமான், அரித்துவாரமங்கலம் காவல் சரகங்கள் தஞ்சாவூரில் இருந்து திருவாரூருடன் சேர்க்கப்படும். மன்னார்குடி அருகே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை நேற்றும் இன்று நாளையும் நமதே என்று கூறி உரையை நிறைவு செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். இதே போன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ‌வேலுமணி, காமராஜ், செங்கோட்டையன், பாலகிருஷ்ண ரெட்டி, சபாநாயகர் தனபால் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT