துறைமுக முகத்துவாரத்தில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் அமைச்சர் கந்தசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை துறைமுகத்துடன் சரக்கு போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக புதுவை மாநில அரசு
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் அமைச்சர் கந்தசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை துறைமுகத்துடன் சரக்கு போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக புதுவை மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஆரம்பக் கட்டபணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சரக்கு கப்பல் எனப்படும பார்ஜ் வந்து செல்ல ஏதுவாக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களாக முகத்துவாரம் ஆழப்படுத்தும் தொய்வடைந்து விட்டது. மணல் தூர்ந்து விட்டதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் துறைமுக அமைச்சர் கந்தசாமியிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கந்தசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மீனவர்கள், துறைமுக முகத்துவாரம் நுழைவு வாயில் 300 மீட்டர் அகலம் உள்ளது. இதை சுருக்க வேண்டும். அகலமாக இருப்பதால் மணல் தூர்ந்து விடுகிறது. விசைப்படகுகள் அடிக்கடி சிக்கி விபத்துக்குள்ளாகி சேதமடைகின்றன. எனவே முகத்துவார நுழைவை 100 மீட்டர் அளவுக்கு குறுக்கி, துண்டில் முள்வளைவு அமைத்து தர வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக தீர்வு காண வேண்டும் என செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Advertisement
துறைமுகம் முகத்துவாரம் தூர்ந்து விடுவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைத்தனர். 2 வார காலமாக தொழிலுக்கு செல்ல
முடியவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இதனால் இந்நிலை குறித்து அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மார்க் நிறுவன தூர்வாரும் கப்பல் மூலம் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.
தூண்டில் முள் வளைவு அமைத்தல் தொடர்பாக கடல்சார் வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து தீர்வு காணப்படும் என்றார். அப்போது அமைச்சர் கந்தசாமி முன்னிலையிலேயே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, ஒரு படகு மணலில் சிக்கிக் கொண்டது. பின்னர் மற்றொரு ஒரு விசைப்படகு மூலம் சிக்கிய படகை கயிறு கட்டி இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.