பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் கைது!
ஹைதராபாத்தில் பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை செய்ய தாய் மற்றும் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை செய்ய தாய் மற்றும் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா(25). இவர் 3 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள பிரகாஷ் என்பவருடன் ஓடிவிட்டார். லலிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 4 வயதான மகள் இருக்கிறாள். பிரகாஷ், லலிதாவும் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல்நிலைய எல்லைக்குள் உள்ள மேற்கு சீனவாச நகரில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். அப்போது குழந்தை ஒரு அனாதை என்றும் விடுதி ஊழியர்களிடம் கூறியதுடன், குழந்தை நாங்கள் எடுத்து பாரமரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரகாஷ், லலிதாவும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கியுள்ளனர். லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, பெற்ற மகள் என்றும் பாராமல், 4 வயது சிறுமியை சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்தார். இதனால், சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவளை குழந்தைகளுக்கான ஆதரவு மையத்துக்கு லலிதா கூட்டிச் சென்றார். சாலை ஓரத்தில் அவள் கிடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து, தெலுங்கானா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், லலிதா, பிரகாஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு அரசு நடத்தும் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அரசு நடத்தும் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு, குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.