தற்போதைய செய்திகள்

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

DIN

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் இவர் உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்ப்போரை வியக்க வைக்கும். பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். 

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒடிசாவின் பிரபலமான சூரியனார் கோவில் அருகே சண்ட்பகே கடற்கரை கோன் கார்டில் ஐந்து நாள் சர்வதேச மணல் சிற்ப கலை விழா நடைபெற்று வருகிறது. இந்த கலை விழாவின் பிராண்ட் தூதராக பட்நாயக் இருந்து வருகிறார். இந்த கலை விழாவில் ஜெர்மனி, மெக்ஸிகோ, கானா, சிங்கப்பூர், கனடா, ஸ்பெயின், இலங்கை மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து 18 பெண்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 70 பங்கேற்பாளர்கள் திருவிழாவில் பங்கேற்றுளளனர். 

சர்வதேச மணல் சிற்ப கலை விழாவின் நான்காவது நாளான இன்றைய விழாவுக்கு வந்த பட்நாயக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் புரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுதர்சன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT