தற்போதைய செய்திகள்

தில்லி விமான நிலையத்தில் மைக்ரோவேவ் ஓவனில் கடத்தி வரப்பட்ட ரூ.56.69 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் மைக்ரோவேவ் ஓவனில் மறைத்து கடத்தி வரப்பட்ட 56.69,400 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை

DIN

புதுதில்லி: தில்லி விமான நிலையத்தில் மைக்ரோவேவ் ஓவனில் மறைத்து கடத்தி வரப்பட்ட 56.69,400 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வரும் கடத்தல்காரர்களை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக பல்வேறு நூதன முறைகளை கடத்தல்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

அந்த வகையில், இன்று தில்லி விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த மைக்ரோவேவ் ஓவனை சோதனை செய்த அதிகாரிகள் அதில் தங்கம் மறைத்து கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர்கள் இருவரும் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவர்ககளை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் சுங்கத்துறை அதிகாரி்கள். போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடத்திவரப்பட்ட தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.56,69,400 என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT