உத்தரபிரதேச முன்னாள் ஆளுநர் ஜோஷி காலமானார்
உத்தரபிரதேச மாநில முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82) உடல் நலக்குறைவால் காலமானார்.
புதுதில்லி: உத்தரபிரதேச மாநில முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி(82) உடல் நலக்குறைவால் காலமானார்.
இதய ரத்தக்குழாயில் தொற்று ஏற்பட்டதால் கடந்த 20 நாட்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
தில்லி துணைநிலை ஆளுநராகவும், மேகாலயா மற்றும் உத்தரகாண்ட் ஆளுநராகவும் பணியாற்றிய அவர் உத்தபிரதேசத்தில் கடந்த 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.