தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 26 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூர் மாவட்டத்தின் துபி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் போருந்து ஒன்று திடீரென நிலைதடுமாறி இழந்து பனாஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 3 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்து ஆற்றில் விழுந்ததும் அருகில் உள்ள கிராமமக்கள் விரைந்து வந்த மீட்பு பணிகளை செய்து, காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அனைத்து உயர் அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர். ஆற்றில் விழுந்த பேருந்தை கயிற்றை கட்டி வெளியே எடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மீட்பு பணிகளில் இதுவரை 26 பேரின் உடல்களை கைப்பற்றினர் என்றும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

பேருந்து அதி வேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT