தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலில் தோல்வியை தழுவிய ஆளும் கட்சி!

2004-ம் ஆண்டுக்குப் பிறகு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி முதன்முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது.

DIN

தமிழகத்தில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி முதல்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியில் நடந்த முதல் இடைத்தேர்தலில் இப்போது ஆளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முதல் தோல்வியை தழுவி உள்ளது. 

2016-ஆம் ஆண்டு நடத்த சட்டப்பேரவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரால் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த 2 இடங்களுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக உறுப்பினர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தையடுத்து அந்த தொகுதியையும் சேர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 3 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற்றது. 

3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது  இதுவே முதன்முறையாகும்.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக முதல் தோல்வியை தழுவி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி!

சபாஷ்! ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி! தங்கம் விலை?

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது: டி.டி.வி. தினகரன்

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியா! 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது!

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தை மீட்பு!

SCROLL FOR NEXT