தற்போதைய செய்திகள்

காளஹஸ்தியில் திருக்கல்யாணம் உற்சவம்

DIN

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான திங்கட்கிழமை அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரன் கோயிலில் கடந்த திங்கட்கிழமை முதல் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் உற்சவம் ஆனந்தராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதனால் திங்கட்கிழமை அதிகாலை 3மணிக்கு காளஹஸ்தீஸ்வரனை யானை வாகனத்திலும்,  ஞான பிரசுனாம்பிகையை சிம்ம வாகனத்திலும் எழுந்தருள செய்து கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

திருக்கல்யாணம் முடிந்தவுடன் காளஹஸ்தீஸ்வரனும், ஞானபிரசுனாம்பிகையும் தனித்தனியாக ருத்ராக்ஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தனர். வாகன சேவையின் போது பக்தர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். திருக்கல்யாணம் துவங்கியது முதல் திருக்கல்யாணம் செய்து கொண்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து கோயிலை அடையும் வரை காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் உள்ள சன்னதி நடைகள் சாற்றப்பட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. உற்சவமூர்த்திகள் காலை 11 மணிக்கு கோயிலை அடைந்த பின் கோயில் நடைகள் திறக்கப்பட்டு பூஜைகள் முறைப்படி துவங்கியது. 

பின் மாலை 6 மணிக்கு ஆனந்தராத்திரி என்பதால் காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் உள்ள  நடராஜஸ்வாமியையும், சிவகாமசுந்திரி அம்மனையும் கோயிலுக்குள் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். அவர்கள் இருவருக்கும் இரவு 8 மணிக்கு சபாபதி திருக்கல்யாணம் நடைபெற்றது.
 

நடராஜரை சபாபதி என்று அழைப்பதால் இந்த கல்யாண உற்சவத்திற்கு சபாபதி திருக்கல்யாணம் என அழைக்கின்றனர். இதில் கோயில் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கல்யாண உற்சவத்தை காண மண்டபத்தருகே பக்தர்கள் கூடினர். கல்யாண உற்சவத்திற்கு வந்த பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT