தற்போதைய செய்திகள்

நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை: திரிஷா

DIN

தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாக நடிகை திரிஷா செயல்பட்டு வருகிறார். இதனால் திரிஷாவுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். சிவகங்கையில் நடிகை திரிஷாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரது கர்ஜனை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிஷா, தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாச்சாரமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற செயலுக்காக தமிழன் என்ற வகையில் வெட்கப்பட வேண்டும். சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செயல்களுக்காக தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. அத்துடன் தான் இறந்துவிட்டதாக சித்தரித்து, வெளியிட்டுள்ள மீம்ஸ்க்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துவது தான் இதுபோன்ற மோசமான செயலுக்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT