தற்போதைய செய்திகள்

ரூபாய் நோட்டு விவகாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும்: பொது கணக்குக் குழு

DIN

புது தில்லி, :  ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் இன்று கூறியதாவது:

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு 20-ஆம் தேதி விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உர்ஜித் படேல் ஆஜராக வேண்டும். அதேநேரத்தில், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் முன்பு 20-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அது தற்போது பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் கேட்டிருந்தனர். அதையேற்று அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் கே.வி. தாமஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT