தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன

DIN

அவசர சட்டம் பிறப்பிக்க பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2011, ஜூலை 11ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில், காளைகளை, மத்திய சுற்றுசூழல், வனத்துறை அமைச்சகம் சேர்த்தது.

இதனால், தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானது. இதற்கு பிறகு இப்பட்டியலில் இருந்து காளைகளை நீக்க எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த போட்டியில் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT