தற்போதைய செய்திகள்

கள ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

புதுச்சேரி ஊசுட்டேரியில் சனிக்கிழமை கள ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டு போராட்டம்

ப. சுஜித்குமார்

புதுச்சேரி  புதுச்சேரி ஊசுட்டேரியில் சனிக்கிழமை கள ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டு போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநில அரசு பரிந்துரை செய்யாமல் மத்திய அரசே நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததும், அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும் ஆளும்காங்கிரஸ் கட்சியினருக்கு கிரண்பேடி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த  5}ம் தேதி முதல் தொகுதி வாரியாக உண்ணாவிரதப் போராட்டம், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 8}ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர்.

எனினும் ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்பு அதிகாரிகளுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபோல் உழவர்கரை தொகுதியிலும் கடந்த 15 நாள்களுக்கு முன்பு களப்பயணம் சென்ற போது, தொகுதி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். 

அதனைத் தொடர்ந்து காங்கிரசாரின் போராட்டம் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஏகேடி ஆறுமுகம் தலைமையில் காந்தி நகரில் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி கொண்டு இருந்தனர்.

அப்போது  சைக்கிளில் ஊசுட்டேரியில் இருந்து கிரண்பேடி சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். இதனை பார்த்தவுடன் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காத, கிரண்பேடியே புதுச்சேரியை விட்டு வெளியேறு என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஏகேடி ஆறுமுகம் கூறியதாவது:

புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்படவிடாமல் கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதனால் புதுச்சேரியில் இருந்து கிரண்பேடி வெளியேற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது. இதனைத் தெரிவிக்கும் வகையில் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினோம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT