தற்போதைய செய்திகள்

சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு 'திராணி' இல்லை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்

ANI

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

லடாக் பகுதியின் பெரும்பாலான இடங்களை சீனா ஆக்கிரமித்து விட்டது. அதுகுறித்து நாம் சப்தம் எழுப்புகிறோமே தவிர, அதனை திரும்பப் பெறும் அளவுக்கு போதிய நடவடிக்கைகள் எதிலும் இதுவரை ஈடுபடவில்லை. அதற்கான தைரியமும் நம்மிடம் இல்லை.

சீனாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவதே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். இந்த விஷயத்தில் சீன அரசுடன் நட்பு பாராட்டும் விதமான நடவடிக்கைகளில் இந்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும். 

சீன அரசு பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதே நம்மால் தான். இந்திய அரசு மட்டும் சீன அரசோடு நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பாகிஸ்தானுடன் நெருங்கி இருக்க மாட்டார்கள்.

அதுபோலதான் தலாய் லாமா சர்சையும். அவரை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்றும்படி சீனா கேட்கிறது. ஆனால், இந்தியாவுக்கு வந்தாரை வாழவைத்துதான் பழக்கம், வெளியேற்றி பழக்கமில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT