தற்போதைய செய்திகள்

மாநிலங்களவையில் என்னை பேச அனுமதிக்க வில்லை என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்: மாயாவதி

DIN

புதுதில்லி:  உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், என்னை பேச அனுமதிக்க வில்லை என்றால் என்னுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.

நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை இப்போதே கொடுத்துவிடுவேன் என்றார் மாயாவதி. உடனடியாக அவையில் இருந்து வெளியேறிவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: உத்தரபிரதேசத்தில் இப்போது குண்டர்கள் ஆட்சி நடைபெறுகிறது.

அங்கு யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. மாநிலங்களவையில் எனக்கு பேச வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இது பூஜ்ஜிய நேரம் கிடையாது நாடாளுமன்றம் மக்களின் நலனுக்கானது. ஆனால் சபாநாயகர் எங்களை பேச அனுமதிப்பது கிடையாது.

தலித் பிரிவினர் மீதான அட்டூழியங்களை அவையில் பேச எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் நான் எம்.பி.யாக இருந்து என்ன நடக்கப்போகிறது, என்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT