தற்போதைய செய்திகள்

வெற்றுக் கூச்சலை பொருட்படுத்த மாட்டேன்: ஆளுநர் கிரண்பேடி

வெற்றுக்கூச்சலை நான் பொருட்படுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். 

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  வெற்றுக்கூச்சலை நான் பொருட்படுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். 

ஆளுநருக்கும், ஆளும் தரப்புக்கும் இடையே புதுவையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு 32 கேள்விகளை எழுப்பி இருந்தார்.  

இதனால் கொதிப்புற்ற முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவைியல் பேசுகையில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படக்கூடாது. இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் வகையில் ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தனது கட்செவி அஞ்சலில் கூறியுளளதாவது: நான் வெற்றுக் கூச்சலை எல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நிறைய கூச்சல் எழுப்பப்படுகிறது. கூச்சலை ஏன் எழுப்புகின்றனர் எனத்தெரியும்.

புதுச்சேரிக்கும், அதன் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனிலும் தான் எனக்கு அக்கறை உள்ளது. புதுச்சேரியின் நலன்களை பேணவும், காக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

SCROLL FOR NEXT