தற்போதைய செய்திகள்

வால்வோ காரின் உலகளாவிய விற்பனை கடந்த மாதம்  இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது

DIN

ஸ்வீடிஷ் கார் தயாரிப்பு நிறுவனத்தின் வால்வோ கார் உலகளாவிய விற்பனை கடந்த மாதம்  இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. 2017ம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் 8.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 534,332 வால்வோ கார்களை இந்நிறுவனம் விற்றுள்ளது. இந்த ஆண்டின் மற்றொரு சாதனையாக முதல் 5 மாதத்திலேயே விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக வால்வோ கார்ஸ் hs  புதிய 90 தொடர் கார்கள் நேர்மறையான வளர்ச்சியைக் கொடுத்தது என்றும் எக்ஸ்சி 60 மாடல் கார்களின் விற்பனை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மே மாதத்தில் விற்பனை 30.6 சதவீதம் அதிகரித்து 12,721 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் சீனாவின் வால்வோ கார் வாங்கும்  தனிநபர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட S90, XC60 மற்றும் S60L மாதிரி கார்கள் வாடிக்கையாளர்களிடம் பிரபலம் அடைந்துள்ளதால் அதன் விற்பனை 38.8 சதவீதம் அதிகரித்து 9,779 ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT