முகப்பு
தற்போதைய செய்திகள்

கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:44 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய போதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்யவில்லை. அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி ராமநதி அணையில் 3 மி.மீ, குண்டாறு அணையில் 19 மி.மீ, அடவிநயினார் அணையில் 2 மி.மீ மழையும் பதிவாயிருந்தன. 

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 322.45 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 28 கனஅடி, ராமநதி அணைக்கு 32.43 கனஅடி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கு தலா 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 46 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 36 அடியாகவும் இருந்தது. 

பாபநாசம் அணை நீர்மட்டம்-32.55 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 26.28 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.71 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 27.75 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 38.25 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 7.01 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 254.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →