தற்போதைய செய்திகள்

சிறு, குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி: பஞ்சாப்  முதல்வர் அமீர்ந்தர் 

DIN

பஞ்சாப்:  பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: - உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் அறிவிக்கப்படும் நிவாரணத்தை விட இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் 8.75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மொத்த பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம்  ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த முடிவு ஒரு நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT