தற்போதைய செய்திகள்

நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகை,சுகாதார இயக்குநர் அலுவலகம் முற்றுகை: 50 பேர் கைது

நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகை, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகை, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் மேற்கொண்ட பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நீட்தேர்வில் இருந்து புதுச்சேரி மாணவர் களுக்கு விதிவிலக்கு கோரும் அவசர சட்டத்தினை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று வெளியிடும் நடைமுறையை அரசு துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் சுகாதாரத்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இளநிலை மருத்துவ, இளநிலை பல் மருத்துவ பாடப்பிரிவுகளுக்கு புதுச்சேரி அரசுகடந்த காலங்களில் செய்தது போல் சென்டாக் முறையிலேயே மாணவ, மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் புதுச்சேரி அரசு சட்டம் இயற்றி மாநில துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
அதை துணைநிலை ஆளுநர் தக்க பரிந்துரையுடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி தகுந்த ஒப்புதல் பெற்று சுகாதார மற்றும் சட்ட அமைச்சகங்கள் மூலம் நீட் தேர்விலிருந்து 2017-18ம் ஆண்டு முதல் விதிவிலக்குகோரும் அவசர சட்டத்தினை குடியரசு த்தலைவர் ஒப்புதல் பெற்று அறிவிப்புª வெளியிடுவதற்கான நடைமுறையை துரிதப்படுத்தவேண்டும்.

இக்கோரிக்கையை சுகாதாரத்துறை மற்றும் நீட் ஒருங்கிமைப்பு அலுவலர் அலுவலகம் மு ன்பு நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் தேவ.பொழிலன், முருகன், சுகுமாறன், சடகோபன், பிரபுராஜ், தனராமன், அழகர், அழகிரி, ஜெகன் நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுப ட்டவர்களிடம் பேச்சுவார்த்¬ தநடத்தினர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை போராட்டம் தொடரும் எனக் கூறினர்.

அவர்கள் போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடினர். அவர்கள் எங்கு ஓடுகிறார்கள் என புரியாமல் போலீசார் திகைத்த போது ஆளுநர் மாளிகை முன்பு போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி விட்டு அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் காரும் முற்றுகையிடப்பட்டது.

பின்னர் போலீஸார் அவரது காரை மீட்டு அனுப்பினர். இப்போராட்டம் தொடர்பாக 50-க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT